டிடிவி தினகரனை வாழ்த்தி தமிழக அமைச்சர் ட்வீட்? 'திடீர்' பரபரப்பு!
நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தி தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் வெளியாகியுள்ள ட்வீட்டானது பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.


சென்னை: நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிடிவி தினகரனை வாழ்த்தி தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் வெளியாகியுள்ள ட்வீட்டானது பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் "ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார்!" என டிவிட்டரில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு ட்வீட் வெளியாகி இருந்தது.
இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்படைந்த நிலையில் தான் அவ்வாறு டிவிட்டரில் டிடிவி தினகரனை வாழ்த்தவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
டிவிட்டரில் எனது பெயரில் வெளியான பதிவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த டுவிட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை.
இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது குறிப்பிட்ட அந்த டிவிட்டர் முகவரியானது அத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...