சர்க்கரை ஆலைகள் முன்பு வரும் 4-இல் போராட்டம்: தேமுதிக அறிவிப்பு
விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பாக வரும் 4-ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.


விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து சர்க்கரை ஆலைகள் முன்பாக வரும் 4-ஆம் தேதியன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தேமுதிக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பல முறை தமிழக அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தேமுதிக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...