ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜி.கே.வாசன் பிறந்த நாள்: பிரணாப் முகர்ஜி வாழ்த்து

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறினர். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 8:58 pm

DIN

தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக் கூறினர். 
ஜி.கே.வாசன் தனது 53-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார். அதையொட்டி தமிழகம் முழுவதும் தமாகாவினர் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளையும் நடத்தினர்.
தலைவர்கள் வாழ்த்து: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, பாமக தலைவர் ஜி.கே.மணி, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீரஜ் சந்திரசேகர், சுப்ரியா உள்பட பலர் வாழ்த்துக் கூறினர்.
டிராக்டருக்கு வரி: இந்த நிலையில் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
விவசாயத் தொழில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிராக்டரை வணிக வாகனமாக மாற்றி கூடுதல் வரி வசூல் செய்ய முற்படுவது ஏற்புடையது இல்லை. எனவே, வணிக வாகனமாக டிராக்டரை மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.