திமுக உயர்நிலைக் குழு இன்று கூடுகிறது
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை ஆராய, திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை ஆராய, திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம், மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வைப்புத் தொகையைக்கூட வாங்க முடியாமல் திமுக தோல்வியைத் தழுவியது. வேட்பாளர் மருதுகணேஷுக்கு திமுகவினரின் வாக்குகளே விழவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பணியை திமுகவினர் சரிவர ஆற்றாததால் இந்த தோல்வி ஏற்பட்டிருப்பதாக மு.க.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்துக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்பட பலர் இதில் பங்கேற்க உள்ளனர்.
கட்சியினர் மீது நடவடிக்கை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக நிர்வாகிகள் யாரும் சரிவர பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வட்டச் செயலாளர் தொடங்கி, மாவட்டச் செயலாளர் வரை ஒருவரை மாறி ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தோல்வி குறித்து ஆராய சட்டப்பேரவை கொறடா அர.சக்கரபாணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு டிசம்பர் 31 -ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதன்படி, நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...