மிடாஸ் ஆலையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை
படப்பை அருகே உள்ள மிடாஸ் மதுபான ஆலை மற்றும் மதுபான ஆலைக்கு பாட்டில்கள் வழங்கும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினர்


படப்பை அருகே உள்ள மிடாஸ் மதுபான ஆலை மற்றும் மதுபான ஆலைக்கு பாட்டில்கள் வழங்கும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினர் வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த சிறுமாத்தூர் பகுதியில் வி.கே.சசிகலாவின் உறவினர்களுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வந்த நான்கு பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் மிடாஸ் மதுபான ஆலைக்கு பாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகள் வழங்கும் அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த நவம்பர் மாதம் மிடாஸ் மதுபான ஆலையிலும், ஸ்ரீசாய் எண்டர்பிரைஸஸ் நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அன்று முதல் 40 நாள்களாக மிடாஸ் மதுபான ஆலையும், ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ் நிறுவனமும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...