மக்களுக்காகவே அதிமுக தலைமையிலான அரசு செயல்படும்: எம்.எல்.ஏக்கள் மத்தியில் சசிகலா பேச்சு!
மக்களுக்காகவே அதிமுக தலைமையிலான அரசு செயல்படும் என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா தெரிவித்தார்.


சென்னை: மக்களுக்காகவே அதிமுக தலைமையிலான அரசு செயல்படும் என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக பொதுச் செயலாளரான சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார்.
பின்னர் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய சசிகலா, 'மக்களுக்காகவே அதிமுக தலைமையிலான அரசு செயல்படும். தான் முதல்வராக வேண்டும் என்று முதலில் பன்னீர்செல்வம்தான் வலியுறுத்தினார் என்று கூறினார்.
சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதைத்த தொடர்ந்து ஒ.பன்னீர் செல்வம் தன்னுடைய பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 7-ம் தேதி அல்லது 9-ம்தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் போயஸ் கார்டனிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...