இளைஞர்களே தயராகுங்க..விரைவில் சட்டசபை தேர்தல்!: தமிழக கிரிக்கெட் வீரரின் விமர்சன ட்வீட்!

தமிழகத்தில் புதிதாக 234 வேலைகள்  காலியாக போகின்றன..எனவே இளைஞர்களே தயாராக இருஙகள் என்று  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள வாய்ப்பு பற்றி ...
இளைஞர்களே தயராகுங்க..விரைவில் சட்டசபை தேர்தல்!: தமிழக கிரிக்கெட் வீரரின் விமர்சன ட்வீட்!
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் புதிதாக 234 வேலைகள்  காலியாக போகின்றன..எனவே இளைஞர்களே தயாராக இருஙகள் என்று  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள வாய்ப்பு பற்றி சூசகமாக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நேற்று நடைபெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விரைவில் அவர் தமிழக முதல்வராக உள்ள சூழ்நிலையில், அவருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பெரும்பாலானவர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இவர் தன்னுடையஎதிர்ப்பை டிவிட்டரில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

'தமிழகத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும், 234 வேலைவாய்ப்புகள் விரைவில் கிடைக்க உள்ளது'

இவ்வாறு அஸ்வின் டிவிட் செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் பற்றியும், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட தோதாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்பதையும் அஸ்வின் இந்த செய்தியில் பூடகமாக குறிப்பிட்டுள்ளார் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com