மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

என்னை யாரும் பதவியில் இருந்து நீக்க முடியாது: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அறிவிப்பு!

அதிமுகவின் அவைத்தலைவர் பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளார்.

News image
Updated On :10 பிப்ரவரி 2017, 9:10 am

சென்னை: அதிமுகவின் அவைத்தலைவர் பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளார்.

அதிமுகவுக்கும் களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவைத்தலைவராக இருந்து வந்த மதுசூதனன் அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுங்க பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதவிக்கு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்த தகவல்கள் வெளியானதும் அதிமுகவின் அவைத்தலைவர் பதவியிலிருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.