சென்னை: கூவத்தூர் உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல் .ஏக்களை சந்திப்பதற்காக சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பாதி வழியில் திரும்பினார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூவத்தூர் உல்லாச விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல் .ஏக்களை சந்திப்பதற்காக புறப்பட்டார். ஆனால் கோவளம் அருகே காவல்துறையினரால் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கூவத்தூரில் அசாதாரண சூழல் நிலவுவதால் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்க அவரது வாகனம் தடுத்து நிறுத்தபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

