சென்னை: சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை மீட்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை மீட்டு நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்று கோரி குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்காக மனைவி ப்ரீத்தாவும், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏவுக்காக அத்தொகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் ஆட்கொணர்வு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவர்களின் மனு மீது விசாரனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் காவல்துறையினர் கூவத்தூர் தனியார் விடுதிக்கு சென்று விசாரனை நடத்தினர். அதன் முடிவை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் அழைத்தனர்.
அதில் எம்.எல்.ஏக்கள் இருவரும் சுய விருப்பத்தின் பேரிலேயே தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக தெரிவித்திருந்தனர்.இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


