மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்: முதல்வர் பேட்டி!

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2017, 1:00 pm

சென்னை: சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். 

அருகிலிருந்த எம்.ஜி.,ஆர் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கும் சென்ற பழனிசாமி  அங்கும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் சக அமைச்சர்கள் மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மேதகு ஆளுநர் தெரிவித்துள்ளார். அதன்படி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து அம்மாவின் ஆட்சி தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.