புதிய அமைச்சரவையில் யாருக்கு இடம்? டி.டிவி. தினகரனுடன் போயஸ் தோட்டத்தில் எடப்பாடி ஆலோசனை!
இன்று மாலை நான்கு மணிக்கு பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை ...


சென்னை: இன்று மாலை நான்கு மணிக்கு பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவுக்கட்டும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்துஇன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று ம் அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அதிமுகவின் துணை பொது செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் நடந்து வருகிறது.
இந்த ஆலோசனையில் முதல்வர் பதவிக்கு தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...