முற்றுகிறது பரபரப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு

முற்றுகிறது பரபரப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார்.
Published on


சென்னை: அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார்.

இதையடுத்து, கூவத்தூர் நட்சத்திர விடுதியில் இருந்து மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி புறப்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நான்கு பேர் இன்று 11.30 மணியளவில் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க 11.30 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, கடந்த 2 வாரங்களாக நீடித்த தமிழக அரசியல் குழப்பம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுநரின் அழைப்பின் பேரில், எடப்பாடி பழனிசாமி இன்று 3வது முறையாக வித்யாசாகர் ராவை சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் உடன் செல்கிறார்கள். மேலும், அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையனும் முதல் முறையாக உடன் செல்வார் என்று நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு 124 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறியிருந்தார். இதையடுத்து, பழனிசாமியை ஆளுநர் அழைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com