நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வருகிறார் அத்வானி

ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வர உள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2017, 6:58 am


கோவை: ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெறும் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சரியாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை வர உள்ளார்.

பிப்ரவரி மாதம் 25ம் தேதி கோவை வரவிருக்கும் அத்வானி, மூன்று நாட்கள் தங்கியிருக்கவும் திட்டமிட்டுள்ளார்.

1998ம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, தற்போது தான் முதல் முறையாக அவர் இந்நகரத்துக்கு வரவிருக்கிறார்.

இந்த 19 ஆண்டுகளில் 5 முறை தமிழகத்துக்கு வந்திருந்தாலும், அவர் கோவைக்குச் செல்லவில்லை என்று தமிழக பாஜக பொதுச் செயலர் வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.

1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, கோவை மாவட்டம் ஆர்எஸ் புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்வதாக இருந்தது. அன்றைய தினம் கோவையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, அத்வானி மற்றும் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கோவையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.