சசிகலா vs ஸ்டாலின்: உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார் ஸ்டாலின்: சசிகலா சாடல்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக மு.க. ஸ்டாலின் பேசி வருவதாக அதிமுக பொதுச் செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.


சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக மு.க. ஸ்டாலின் பேசி வருவதாக அதிமுக பொதுச் செயலர் சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலரான பிறகு, சசிகலா வெளியிட்டிருக்கும் முதல் அரசியல் தொடர்பான அறிக்கையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரடியாக தாக்கிப் பேசியிருக்கிறார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது தான், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
அப்போதே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, அவசரச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். ஜல்லிக்கட்டுக்கான சட்டப் போராட்டங்களை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்,உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பித்த ஆணையை மறு சீராய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த ஜெயலலிதா ஆணைப்படிதான் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
2015ல் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் இயற்றக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
தமிழக மக்களின் நலனுக்காகவே, தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என்று சசிகலா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...