வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

அதிர்ஷ்ட வாய்ப்பு யாருக்கு? வார பலன்கள்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

News image
வார பலன்கள்
Updated On :27 பிப்ரவரி 2026, 7:47 am
Updated On :27 பிப்ரவரி 2026, 7:47 am

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப். 27 - மார்ச் 5) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களைக் குறை கூறியவர்கள் தேடிவந்து புகழ்வார்கள். உங்கள் தன்னம்பிக்கை, தனித்தன்மை கூடும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் உற்பத்தியில் கூடுதல் அளவைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்துமுடிப்பர். பெண்கள் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் வருங்காலத்துக்குச் செய்யும் பயிற்சிகள் யாவும் வெற்றிகரமாக அமையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் மேன்மையாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் கால நேரங்களை வீணாக்காமல் உழைத்து பெருமையான புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். கலைத்துறையினர் பேசும்போது கவனமாக இருப்பீர்கள். பெண்கள் கணவருடன் சுமுகமாக நடந்துகொள்வீர்கள். மாணவர்களுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் திருமணம், மழலை பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைச் சாதுர்யத்துடன் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும்.

விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறையும். அரசியல்வாதிகளுக்கு புதிய தொண்டர்களின் ஆதரவு பெருகும். கலைத்துறையினர் சில சில்லறைச் செலவுகளை செய்ய நேரிடும். பெண்களுக்கு கணவருடன் உள்ள ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருமானம் சிறப்பாக இருக்கும். வெளியிலிருந்து சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகள் சக விவசாயிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களே புதிய வாய்ப்புகளைத் தேடித் தருவார்கள். பெண்கள் குடும்பத்தாருடன் அன்பு, பாசத்துடன் பழகுவீர்கள். மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் எதிர்ப்புகள் ஏற்படாது. அரசாங்க சலுகைகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவாக வேலைகள் நல்லபடியாக முடியும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் புதிய தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிப்பீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் பெரியோரின் ஆசிகளைப் பெற்று ஆன்மிகப் பலத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று வருவீர்கள். தொடர் வருமானம் வரத் தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரிகள் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் வரவு செலவுகளில் கவனமாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் திட்டங்களைச் செயல்படுத்தி புகழ் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தினரிடம் தங்கள் எண்ணங்களை அனாவசியமாகப் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் சொல்வாக்கு செல்வாக்காக மாறும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக பிரச்னைகளிலிருந்து விலகி இருப்பீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயலில் இறங்கி நேரடியாக விற்பனையைக் கவனிப்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டுப் பயன் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். கலைத்துறையினரைத் தேடி புதுப்புது வாய்ப்புகள் வரும். பெண்களுக்கு பெற்றோரிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சிக்கனமாக இருந்து சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு சற்று கூடும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினரின் பொருளாதார நிலையில் அனுகூலமான மாற்றங்கள் ஏற்படும். பெண்கள் மனக் குழப்பங்களிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுக்கு படிப்பில் உதவி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்.27.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

காரியங்களில் முயற்சி செய்து வெற்றி பெற்று விடுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத் தொடர்பான பயணங்கள் வெற்றி தரும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வந்து சேரும். விவசாயிகளின் கடின உழைப்பால் விளைச்சலில் மேன்மை உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் மனதை அரித்து வந்த பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்துவிடுவீர்கள்.

பெண்கள் குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் எதிர்பார்த்த சாதனை செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்.28, மார்ச் 1.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் இருந்த பகையும் பிரச்னைகளும் தீரும். தொழிலில் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன்கள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபார அபிவிருத்திக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் பால் வியாபாரத்தால் கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் முக்கியமான விஷயங்களில் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். கலைத்துறையினர் மன்றங்களுக்குச் சிறிது செலவழிப்பீர்கள். பெண்கள் சுபகாரியங்களை சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - மார்ச் 2, 3, 4.

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இல்லத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் துணிச்சலுடன் காரிய மாற்றி நற்பெயரெடுப்பீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு சற்று கூடுதலாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் விடாமுயற்சி கைகொடுக்கும். பெண்கள் பிரச்னைகளை சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 5.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் முயற்சிக்கு தகுந்த லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஒத்துழைப்புடன் ரசிகர்களுக்கு உதவி செய்வீர்கள். பெண்கள் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து விடுவீர்கள். மாணவர்கள் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.