சென்னை: அன்னிய செலாவணி வழக்கில் அமலாக்கப் பிரிவினர் விதித்த ரூ.28 கோடி அபராதத்தை எதிர்த்து தாக்கல் செய்த டிடிவி தினகரனின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரனரும், அதிமுக பொதுச் செயலர் சசிகலாவின் அக்கா மகனுமான டிடிவி தினகரன், கடந்த 1991 - 95ம் ஆண்டுகளில் வெளிநாட்டில் பல கோடி ரூபாய் முதலீடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டக் குற்றத்துக்காக, அமலாக்கத் துறை சார்பில் டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத்தை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, டிடிவி தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ.28 கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டது.
மேலும, டிடிவி தினகரன் திவாலானதாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


