திமுக இளைஞரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமனம்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நியமனம் செய்யபட்டிருப்பதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுக இளைஞரணி செயலாளராக இருந்து வந்தவர் மு.க.ஸ்டாலின்.சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கும் அவர் , சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே அவர் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் ஆகிய பொறுப்புகள் யாருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த 2006-11 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞசாலை மற்றும் பராமரிப்பு துறை அமைச்சராக இருந்த வெள்ளகோவில் மு.பெ.சாமிநாதனை அப்பொறுப்புக்கு நியமித்து திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.