தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்று தமிழக முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும். அதனை தமிழக அரசு உறுதி செய்யும். ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவிலிருந்து எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்.
அதேநேரம் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்ற இயலாது. அவ்வாறு 2009-ல் திமுக கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழக அரசால் தனியாக சட்டம் இயற்ற முடியாது.
இருந்தாலும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை நிலைநிறுத்த உறுதியாக செயல்படுவோம்.
இவ்வாறு முதல்வர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...