நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழ் மொழிக்கு தொண்டாற்றியவர்களுக்கு விருதுகள்: முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்! 

தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் விருதுகளை வழங்கினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:45 am

DIN

சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் விருதுகளை வழங்கினார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா   சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும் மேலும், அண்ணா விருது கவிஞர் கூரம் மு.துரைக்கும், காமராஜர் விருது டி. நீலகண்டனுக்கும் பாரதியார் விருது முனைவர் ச. கணபதிராமனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், திரு.வி.க. விருது போராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கும் வழங்கப்பட்டது.

விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். நிகழ்வில் பேசிய அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றிய விசயங்களை உருக்கமாக நினைவு கூர்ந்தார். மேலும் தமிழர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றியும் அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.