திருச்செந்தூரில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய 15 பேர் கைது!
மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத் தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சு விரட்டு நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருச்செந்தூர்: மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத் தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சு விரட்டு நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் தினமான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை விளாங்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் அந்தந்தப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தடையை மீறி இன்று காலை மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதற்காக வாடிவாசல் போல தற்காலிகமான இடமொன்று அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர். இதனையடுத்து தடையை மீறி ஜல்லிக்கட்டுநடத்திய குற்றத்திற்காக 15 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல திருச்சி, கல்லணை அருகே உத்தமசீலி கிராமத்தில் 50 மாடுகளை இளைஞர்கள் காளைகளுக்கு பூஜை போட்டு மாடுகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...