
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதலைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தென் மாவட்டங்களில் நிலவுகின்ற அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அதைப்பற்றி விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் உடனடியாக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதன் மூலம் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு தருவதாக பிரதமர் மோடி அளித்துள்ள உறுதிமொழியினை கணக்கில் கொள்ள வேண்டும். போராட்ட களத்திலிருக்கும் மாணவர்களின் உணர்வுகளை முதல்வர் மதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.