விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜல்லிக்கட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்! 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2017, 6:47 am

புதுதில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நேற்று மாலை பிறப்பித்தது. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வுதான் வேண்டும் என்று கூறி தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் அந்த வழக்கு குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும். தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து ‘பீட்டா’ போன்ற அமைப்புகள் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.