பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.100 கோடி தர மத்திய அரசுக்கு கோரிக்கை: அமைச்சர் கமலகண்ணன்

வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.100 கோடியை தர மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2017, 12:22 pm

சுஜித்குமார்

புதுச்சேரி: வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.100 கோடியை தர மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் வறட்சி நிவாரணத்துக்காக மத்திய அரசிடம் நிதி கோருவது தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்து விவசாய அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:

புதுவை மாநிலத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு நெல் மற்றும் கரும்பு பருவப் பயிராக பயிரி டப்பட்டுகிறது. காவிரி நீர் வராததால் காரைக்காலிலும், செஞ்சியாறு, பெண்ணையாறு போன்ற நதிகளில் நீர் வராததாலும் புதுச்சேரியிலும் வறட்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது.

காரைக்கால் பகுதிக்கு 7  டி.எம்.சி. க்கு, வரவேண்டிய காவிரி நீர்  0.051 மட்டுமே வந்தது. மேலும் 986 மி.மீ. ஆண்டு சராசரி மழைக்கு பதிலாக கடந்த ஆண்டு 283 மி.மீ. மழை மட்டுமே பெய்தது.

புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழையான 1323 மி.மீ. பதிலாக 637 மி.மீ. மழை மட்டுமே பெய்தது. காரைக்காலில் 4 ஆயிரத்து 400 ஹெக்டேர் விவசாய நிலமும், புதுச்சேரியில் ர் 4 ஆயிரத்து 483 ஹெக்டேர் விவசாய நிலமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல், கரும்பு- பயிர் வகைகள், சிறு தானிய வகைகள், மணிலா மற்றும் காய்கறி ஆகிய விவசாய பயிர்கள் நாசமடைந்தும், உற்பத்தி குறைந்தும் மொத்தம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வறட்சி நிவாரணத்திற் காக மத்திய அரசு மத்திய குழுவை அனுப்பி அறிக் கையை பெற்று கூடுதல் நிதி வழங்க வேண்டும் என தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.