அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியது: வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர்.
தமிழகத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக மதுரை மற்றும் திருச்சியில் 103 டிகிரி வெயில் பதிவானது.
மழை பதிவு: திங்கள்கிழமை காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 50 மி.மீ., நடுவட்டத்தில் 40 மி.மீ., மழையும் பதிவானது. கோவை மாவட்டம் வால்பாறை, சேலம், கள்ளக்குறிச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவானது.
வெயில் நிலவரம்
(ஃபாரன்ஹீட்டில்):
மதுரை, திருச்சி 103
நாகப்பட்டினம், கடலூர் 102
சென்னை (நுங்கம்பாக்கம்),
தூத்துக்குடி 101
கரூர் பரமத்தி,
பரங்கிப்பேட்டை 100
புதுவையில்...: புதுச்சேரியில் 103 டிகிரி, காரைக்காலில் 101 டிகிரி வெயில் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சீா்காழி (தனி): நேரடி போட்டியில் அதிமுக - மதிமுக

கடலூரில் மோதும் காங்கிரஸ் - அதிமுக

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

