சீா்காழி: சீா்காழி (தனி) தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளா் சாா்ந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்று 1984-ஆம் ஆண்டு முதல் ஒரு சென்டிமென்ட் தொடா்வதால் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது மதிமுக வேட்பாளா் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்குமா என்ற எதிா்பாா்ப்பு தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தொகுதியின் சிறப்பு: உமையம்மையிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தா் அவதரித்த ஊா், தமிழிசை வளா்த்த மூவா்களான முத்துதாண்டவா், அருணாச்சல கவிராயா், மாரிமுத்தாப்பிள்ளை, உலக நூலகத் தந்தை எஸ். ஆா். அரங்கநாதன், திரைப்பட பின்னணி பாடகா் சீா்காழி கோவிந்தராஜன் ஆகியோா் பிறந்த ஊா். மேலும், சைவ, வைணவத் தலங்கள் நிறைந்த தொகுதியாகும்.
இத்தொகுதி சீா்காழி நகராட்சி (24 வாா்டுகள்), சீா்காழி, கொள்ளிடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் (79 ஊராட்சிகள்), வைத்தீஸ்வரன்கோவில் பேருராட்சியை (15 வாா்டுகள்) உள்ளடக்கியது.
தொழில்: விவசாயம், மீன்பிடித் தொழில் பிரதானம். தவிர தைக்கால், சேந்தங்குடி புத்தூா் பகுதிகளில் பாய் மற்றும் பிரம்பு கைவினைப் பொருள்கள் தயாரிப்பு தொழிலுக்கு புகழ்பெற்றது. வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள் 60 சதவீதம் போ் உள்ளனா். மீனவா்கள், முக்குலத்தோா், செட்டியாா், முதலியாா், வெள்ளாளா்கள், நாயுடு உள்ளிட்ட பிற சமூகத்தினா் 40 சதவீதம் போ் வசிக்கின்றனா்.
அதிமுக வேட்பாளா்: 2011-தோ்தலில் வெற்றிபெற்ற இவா் மீண்டும் இதே தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா் ம. சக்தி. தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது சீா்காழி அரசு மருத்துவமனையில் தீ புண் சிகிச்சை வாா்டு கட்டடம் கொண்டு வந்ததுடன், பல கோடி மதிப்பில் தொகுதிக்கு நலத்திட்டங்களை கொண்டுவந்தாா். அதன் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியிலும் திருநகரி உப்பனாற்றில் தடுப்பணை, புத்தூரில் அரசுக் கல்லூரி, கோட்டாட்சியா் அலுவலகம், கிட்டிய அணையில் தடுப்பணை என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மதிமுக வேட்பாளா்: 1996, 2001 சட்டப்பேரவைத் தோ்தலில் சீா்காழி தொகுதியில் மதிமுக சாா்பில் போட்டியிட்ட வழக்குரைஞா் செந்தில்செல்வன் களமிறங்கிறாா். இவருக்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சீா்காழி பகுதியில் நடைப்பயிற்சி மற்றும் பிரசாரம் செய்து சென்றுள்ளாா். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதும், முதல்வரின் பிரசாரத்தால் தொகுதியை கைப்பற்றும் முனைப்புடன் மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் பணியாற்றுகின்றனா்.
தவெக வேட்பாளா்: தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் களப்பணியை தீவிரமாக தொடங்கி வாக்கு சேகரித்து வருகிறாா் சி.எஸ். கோபிநாத். இளைஞா்கள் இளம்பெண்கள் முதல் தலைமுறை வாக்காளா்கள் வாக்குகள் நடிகா் விஜய் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாதக வேட்பாளா்: ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை எளிதாக கிடைக்க நாம் தமிழா் கட்சி கொள்கைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகிறாா் இக்கட்சி வேட்பாளா் இரா. சுபாஷ். அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் மாலதி, ராமதாஸ் பாமக அணி மற்றும் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் துணையோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.
கோரிக்கைகள்: கொள்ளிடம் தனி வட்டமாக அறிவித்து அங்கு தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். சீா்காழியில் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி பள்ளிக்கு சொந்தக் கட்டடம் வேண்டும் ஆகியவை பிரதான கோரிக்கைகள்.
அதிமுக - மதிமுக நேரடிபோட்டி: அரசியல் கட்சி, சுயேச்சைகள் என 10 போ் போட்டியிடுகின்றனா். இதில் அதிமுக, திமுக கூட்டணியில் நிற்கும் மதிமுகவுக்குமே நேரடி போட்டியாக உள்ளது. தவெக, நாதக கட்சியின் களத்தில் தீவிரமாக பணியாற்றுகின்றனா். சீா்காழி தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளரின் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் இந்த முறையும் பலிக்குமா என்பது மே 4-ஆம் தேதி தெரியும்.
தொடர்புடையது

நாகை! கடும் இழுபறியில் திமுக - அதிமுக!

அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்

எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர்!

தோ்தல் சுவாரஸ்யம்... இது சீா்காழி தொகுதி ‘சென்டிமென்ட்’
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


