டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 12:54 am IST

தமிழகத்தில் 210 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வா் ஆவாா் என ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பி. சண்முகநாதன் கூறினாா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், அதிமுக ஒன்றியச் செயலா் காசிராஜன் உள்பட கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் பாஜக, அமமுக, புரட்சி பாரதம், பாமக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 210 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அலை வீசுகிறது என்றாா் அவா்.