‘ஊழலில் மிதக்கும் தமிழகத்தை தூய்மைப்படுத்த வா!’ என்று நடிகர் கமல் ஹாசனை புதுக்கோட்டை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட கமல் நற்பணி மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் கமலை அரசியலில் குதிக்கும்படி அழைப்புவிடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், பேனர்களைத் தாண்டி சமூக வலைத்தளத்திலும் இந்த போஸ்டர் டிரெண்டிங்கில் உள்ளது.
'நடிகர் சங்கத்தை, தயாரிப்பாளர் சங்கத்தையும் தூய்மை படுத்தினாய், எப்பொழுது தலைவா... ஊழலில் மிதக்கும் தமிழகத்தை தூய்மைப் படுத்துவாய்? மனது வை தலைவா... தூய்மை நாயகனே... விரைவில் உங்கள் சேவையை எதிர்நோக்கும் தமிழ்மக்கள்...
ஜூலை 9-ல் நன்னிலத்திற்கு வருகை தரும் எங்கள் உலக நாயகனே வருக! வருக!!'

கடந்த சில காலமாக தமிழக அரசியல் பற்றியும் சமூக பிரச்னைகள் பற்றியும் தனது கருத்துகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார் கமல். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதே இன்னும் உறுதியாகாத நிலையில் தற்போது நடிகர் கமலையும் ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்திருப்பது மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

சித்திரை மாதப் பலன்கள் - மீனம்

திரைப்படம் என்பது ஒருவரின் பயணம் மட்டுமே அல்ல... படப்பிடிப்பு அனுபவம் பகிர்ந்த சம்யுக்தா!

ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


