ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

News image
Updated On :11 ஜூலை 2017, 7:03 am

DIN

மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

மும்பையில் நடைபெற்ற காலா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 22- ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் ஜூன் 28- ஆம் தேதி மும்பையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு ரஜினி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார்.

அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து அங்கிருந்த நண்பர்களிடம் ஆலோசித்ததாகத் தெரிகிறது. பூரண ஓய்வுக்குப் பிறகு அவர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

மும்பை செல்வதற்கு முன்பாக இரண்டாவது கட்டமாக ரசிகர்களை வரும் அக்டோபர் மாதத்தில் சந்திக்கவுள்ளதாக ரஜினிகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.