பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடன் தொல்லையால் 2 குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது

குறிஞ்சிபாடி அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த தாய் தனது இரு மகன்களைக் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு....

News image
Updated On :17 ஜூலை 2017, 7:11 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

குறிஞ்சிபாடி அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த தாய் தனது இரு மகன்களைக் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் அருகேயுள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவரது மனைவி சாய் பாபு (35). இவருக்கு கோஷன் (8), கோகுல் (7) என்ற இரு மகன்கள் இருந்தனர். இவர், மகளிர் சுய உதவிக் குழுவில் தலைவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்குக் கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் சுமையால் பாதிக்கப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குள்ளன்சாவடி அருகே உள்ள நார்த்தனார் பழனியம்மாள் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கும் பணம் கொடுத்தவர்கள் தேடி வந்து கேட்டதால் மனம் உடைந்து அவர் இன்று காலை சுமார் 6 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊருக்குச் செல்வதாக புறப்பட்ட அவர் வயலில் உள்ள ஒரு கிணற்றில் 2 குழந்தைகளைத் தூக்கி வீசி அவரும் குதித்துத் தற்கொலைக்கு முயன்றார்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர், லேசான காயங்களுடன் மீட்ட அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கைது செய்யப்பட்டார். கடன் தொல்லையால் இரு குழந்தைகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் குள்ளன்சாவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறிஞ்சிபாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.