பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

என்.எல்.சி: சுரங்கம் 2-ல் ஒப்பந்த தொழிலாளர்கள் நுழைவாயில் ஆர்ப்பாட்டம்

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1A தொகுதியில் 1000-த்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

News image
Updated On :20 ஜூலை 2017, 7:52 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலி: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1A தொகுதியில் 1000-த்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், எஸ்.எம்.டி பிரிவில் பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மாதத்திற்கு 26 நாட்கள் பணி நாட்களாக இருந்தது. அதனை 19 நாட்களாக என்.எல்.சி நிறுவனம் குறைத்துள்ளது. இதனைக் கண்டித்து, கடந்த 12-ம் தேதி முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் ஆணையர் கனேஷன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து புதன்கிழமை இரவு அனைத்து ஒப்பந்த தொழிலாளர் சார்பில் நெய்வேலி எட்ரோட்டில் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக வியாழக்கிழமை அனைத்துத் தொழிலாக பகுதியிலும் நுழைவாயில் கூட்டம் நடத்துவதும், வெள்ளிக்கிழமை கியூ பாலம் அருகே அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிக்க  தீர்மானித்துள்ளனர். அதன்படி இன்று காலை சுரங்கம் 2-ல் தெர்மல் ஆகிய பகுதியில் தொழிலாளர்கள் நுழைவாயில் கூட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை காரணமாக என்.எல்.சியில் வேலைநிறுத்த போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.