காதல் விவகாரம்: இணைபிரியா தோழியைக் கொன்று புதைத்த கொடூரம்
காதலுக்குக் கண்கள் இல்லை என்பார்கள்..இங்கு மனசாட்சியும் இல்லை என்று தான் சொல்லமுடியும். இணைபிரியா தோழி என்றும் பாராமல் கொலை செய்து புதைத்த கொடூரம் பண்ருட்டியில் நேர்ந்துள்ளது.


பண்ருட்டி: காதலுக்குக் கண்கள் இல்லை என்பார்கள்.. இங்கு மனசாட்சியும் இல்லை என்று தான் சொல்லமுடியும். இணைபிரியா தோழி என்றும் பாராமல் தன் காதலுக்கு இடையூறாக இருந்த தோழியையே கொலை செய்து புதைத்த கொடூரம் பண்ருட்டியில் நேர்ந்துள்ளது.
பண்ருட்டி வட்டம் புலியூர் காட்டுச்சாகை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (19), இவர் சாத்தமாம்பட்டு கிராமத்தில் உள்ள சித்தி ஜெகதீஸ்வரி வீட்டில் தங்கி செவிலியர் பயிற்சி படித்து வந்தார். இவரும் பண்ருட்டி வட்டம் கீழ்காங்கேயன் கும்பத்தைச் சேர்ந்த சித்ராவும்(19) நண்பர்கள். இணைபிரியா தோழிகள் என்றும் சொல்லலாம்.
அப்படி இருக்க, அங்கு தான் பிரச்னை ஏற்பட்டது. பண்ருட்டி அடுத்துள்ள விஜயராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்துள்ளார். அடிக்கடி சிகிச்சை பெற வந்த விஜயராஜுவுடன் தோழிகள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
சில நாட்களில் நட்பு காதலாக மலர்ந்தது. அதில் என்ன கொடுமை என்றால்...தோழிகள் இருவரும் விஜயராஜாவை காதலித்துள்ளனர். அவ்வளவு தான் தோழிகள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் விஜயராஜாவை விட்டுக்கொடுப்பதாக இல்லை.
இந்தச் சம்பவத்தில் ஆத்திரம் அடைந்த சித்ரா தனது தோழியான திவ்யாவை கொலை செய்ய முடிவு செய்தார். திவ்யாவிடம் பேசி அவரை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய ஆண் நண்பர் எனக்கூறப்படும் திருவாமூரைச் சேர்ந்த மோகன் என்பவரின் உதவியுடன் கொலை செய்து, காமாட்சி பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றில் புதைத்துள்ளார்.
முன்னதாக, திவ்யா காணாமல் போனதைத் தொடர்ந்து கடந்த 18.05.17 அன்று திவ்யாவின் பெற்றோர்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் சித்ராவை விசாரித்த போலீசார், இதில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்து, சித்ராவை கைது செய்து மேலும் விசாரிக்கையில், சித்ரா உண்மையை ஒப்புக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...