ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிவிட்டேன்: எம்எல்ஏ ஆறுகுட்டி அறிவிப்பு

ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து வெளியேறிவிட்டதாக எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 ஜூலை 2017, 8:18 am

DIN

ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து வெளியேறிவிட்டதாக எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கோவை கவுண்டம்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிவிட்டேன், மீண்டும் இணையமாட்டேன். யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை, தொகுதி மக்களை மட்டுமே நம்பியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 

அதிமுக இரு அணிகள் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். இரு அணிகளும் இணைவது பற்றி ஓபிஎஸ்-இபிஎஸ் பேச வேண்டும். அப்படி சந்தித்து பேசினாலே பிரச்னை தீர்ந்துவிடும். இணைப்பு தொடர்பான யோசனையை புறக்கணிக்கிறார் ஓபிஎஸ். 

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காமல் ஓபிஎஸ் அணியினர் புறக்கணிக்கின்றனர். அதனாலேயே நானும் அவர்களை புறக்கணிக்கிறேன். என்னுடைய நிலை மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.