அந்நிய செலாவணி மோசடி வழக்கு: தடை கோரிய டிடிவி தினகரன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


புது தில்லி: அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு டிடிவி தினகரன் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், டிடிவி தினகரன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்தியாவில் பிறந்திருந்தாலும் டிடிவி தினகரன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். எனவே அவரை இந்திய சட்டப்படி விசாரிக்க முடியாது. மேலும், பெரா சட்டத்தின் கீழ் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் வாதம் முன் வைக்கப்பட்டது.
மேலும், வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டவை என்றும் கூறப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம், அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்ததோடு, பெரா வழக்கில் தினகரன் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...