பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

நெய்வேலியில் சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநாட்கள் 19 ஆக அமைக்கப்பட்டத்தைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள்...

News image
Updated On :31 ஜூலை 2017, 5:24 am

பண்ருட்டி ஸ்ரீனிவாசன்

நெய்வேலியில் சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களின் பணிநாட்கள் 19 ஆக அமைக்கப்பட்டத்தைக் கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஜூலை 12 முதல் வேலைநிறுத்த போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக சுரங்கம் 1A ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் 26 நாட்கள் நிரந்தர பணி வழங்கப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வடலூர் நான்முனை சந்திப்பில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், சென்னை-கும்பகோணம், கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும்,  போலீசார் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.