கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

திமுக, அதிமுகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:40 pm

DIN

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தேன். வாழ்த்து தெரிவித்ததுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அக்கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி அமைத்துக் கொள்ளக் கூடாது என்று சிலர் எச்சரித்திருந்தனர்.
தலைவர்களின் பிறந்த நாள்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது அரசியல் நாகரிகங்களில் ஒன்றாகும். வட மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிரெதிர் அணிகளில் இருப்பவர்கள்கூட பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஒன்று கூடுவதும், அரசியல் தவிர்த்து பிற இடங்களில் நண்பர்களாகப் பழகுவதும் வாடிக்கையாகும்.
அத்தகைய நாகரிகத்தை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
ஆனால், எதிரணியில் உள்ள தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுகூட அரசியலாக்கப்படுவது தான் தமிழகத்தின் துரதிருஷ்டம்.
திமுகவின் முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி சில வாரங்களுக்கு முன் முத்துவிழா கொண்டாடினார். வீட்டில் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவருடன் பேசும்போது, "கட்சி என்பது வேறு; நட்பு என்பது வேறு. இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல் லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம்' என்று கூறினேன்.
கொள்கையில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில், அரசியல் நாகரிகம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். இதற்கும் கூட்டணிக்கும் தொடர்பு இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.