பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நல்ல நிர்வாகியா?.. ரப்பர் ஸ்டாம்பா..?: நாராயணசாமிக்கு கிரண்பேடி கேள்வி

நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை

News image
Updated On :5 ஜூன் 2017, 4:06 am

DIN

புதுச்சேரி: நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இதனால் முதல்வர் - ஆளுநருக்கிடையே ஆன  மோதல் மேலும் வலுத்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கிரண்பேடி, நாராயணசாமிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

நல்ல நிர்வாகியாக இருக்க வேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமா? மக்கள் நீதி வேண்டி கண்ணீர் வடிப்பதால் நிர்வாகியாக உதவ வேண்டியது அவசியமானது என்றும் யூனியன் பிரதேசத்தில் முதல்வரும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.

மேலும், தாம் செயல்படுவதை யார் தவறு என கூறுகின்றனர் என்றும் ஆவேச கேள்விகளை கிரண்பேடி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.