ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்த அரசின் தவறுகளை சட்டப்பேரவை கூட்டத்தில் எடுத்துரைப்போம்: சூடான பன்னீர்செல்வம்!

இந்த அரசின் தவறுகளை சட்ட ப்பேரவை கூட்டத்தில் எடுத்துரைப்போம் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

News image
Updated On :12 ஜூன் 2017, 8:24 am

DIN

சென்னை இந்த அரசின் தவறுகளை சட்டப்பேரவை கூட்டத்தில் எடுத்துரைப்போம் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

முன்னாள்; முதல்வரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்தை நடத்துவதற்கு என்று அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்பட்டு விட்டன. பின்னர் பேச்சு வார்த்தை எப்படி நடைபெற முடியும்? பேச்சு வார்த்தை என்று துவங்கிய நாளிலிருந்து அந்த அணியினர் தொடர்ந்து நாடகம் ஆடி வருகின்றனர்.

அவர்கள் போல நாங்களும் நாடகம் ஆட தயார் இல்லை. குழுக்களிடையே ஆக்கப்பூர்வமான எந்தவொரு யோசனையும் கருத்து பரிமாற்றம் செய்யவில்லை. இதனை உணர்ந்த பின்புதான் பேச்சுவார்த்தைக்கென அமைக்கப்பட்ட குழுவை கலைத்தோம்.

அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இதை கூடிய விரைவில் நிரூபிப்போம். அதிமுக கட்சி சட்ட விதிப்படி தற்பொழுது பொதுச் செயலர் பதவி காலியாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அவைத்தலைவரும் பொருளாளரும்தான் கட்சியை நடத்த வேண்டும்.

தற்பொழுது இது தொடர்பான விவகாரம் தேர்தல் கமிஷன் கையில் உள்ளது. மிக விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். அதனை நீங்கள் காண்பீர்கள்.

ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் எங்களின் கோயில். அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்பது சட்டப்படி முடிவு செய்யப்பட்ட வேண்டும்.

வரும் 14 ம் தேதி காலை 9 மணிக்கு சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த அரசின் தவறுகளையும், செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைப்போம்.

இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.