கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சட்டப்பேரவையில் இருந்து மு.க. ஸ்டாலின் வெளியேற்றம்: திமுக உறுப்பினர்கள் சாலை மறியல்; கைது

சட்டப்பேரையில் இருந்து எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடன் துரைமுருகன், குமார்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:45 pm

DIN

சட்டப்பேரையில் இருந்து எதிர்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடன் துரைமுருகன், குமார் ஆகியோரும்  வெளியேற்றப்பட்டனர்.

பேரவை உறுப்பினர் சரவணன் வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதையடுத்து தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தி கூச்சல்குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், குமார் ஆகியோரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

பின்னர் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் மோசடி செய்தது நியாயமா?, தமிழக அரசை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.