தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விடியோ விவகாரம்: பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:45 pm

DIN

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான விடியோ குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும்' என்று கோரினார். ஆனால் இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி மறுத்துவிட்டார்.

பேரவைத் தலைவரின் இந்த முடிவுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின்,
விடியோ விவகாரம் குறித்து முறையிட ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளோம். பல கோடி பேரம் பேசப்பட்டது சட்டப்பேரவைக்கு அவமானம். சரவணன் விடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பேரம் தொடர்பாக சரவணன் எம்எல்ஏ பேசியது பற்றி விவாதிக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து எம்எல்ஏக்கள் பேசலாம். தீர்ப்பு, நீதிமன்ற செயல்பாடு குறித்து பேசக்கூடாது என்றுதான் விதி உள்ளது என இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.