சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இட்லி அவிப்பதுபோல அல்ல மின் திட்டம்: பேரவையில் எழுந்த சிரிப்பலை

மின் திட்டம் அமைப்பது என்பது இட்லி அவிப்பது போன்ற எளிதான பணி இல்லை என திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறிப்பிட்டதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

DIN

மின் திட்டம் அமைப்பது என்பது இட்லி அவிப்பது போன்ற எளிதான பணி இல்லை என திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறிப்பிட்டதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசும்போது, சம்சாரம் இல்லாமல்கூட ஒரு மனிதன் இருந்து விடலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் ஒரு நாள்கூட மனிதனால் இருக்க முடியாது என்றார்.
அதன் பிறகு, இட்லித் தட்டில் மாவை ஊறி, இட்லியை எளிதாக அவித்துவிடலாம். ஆனால், மின்திட்டங்கள் அமைப்பது என்பது அப்படிப்பட்டது இல்லை என்றார்.
அப்போது, பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டு, திமுக உறுப்பினருக்கு சமைக்கவும் நன்றாகத் தெரியும் போலிருக்கிறது என்றார்.
அதற்கு ஆஸ்டின், எல்லாம் தெரிந்தவர்கள்தான் திமுகவினர் என்றார். இதனால் அவையில் பலத்த சிரிப்பலை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.