தமிழக மீனவர்கள் 8 பேர் கைது: தொடர்ந்து இலங்கை கடற்படை அட்டூழியம்
மீன்பிடி தடைக்காலம் முடித்து மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாகப்பட்டினம்: மீன்பிடி தடைக்காலம் முடித்து மீன்பிடிக்க சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் படகில் 8 பேர் கோடியக்கரைக்கு கிழக்கே அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரையும் கைது செய்ததுடன், அவர்களது படகையும் சிறைபிடித்து யாழ்ப்பாணம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவதால் அதிகரிப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...