கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு!

சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர்  குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2017, 7:20 am

சென்னை: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர்  குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.

சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸ்லைட்டுகள் நேற்று கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 12 வீரர்கள் மரணமடைந்தனர். இவர்களில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரும் (36)  ஒருவராவார்.  இவர் ஹவில்தாரராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பலியான சங்கரின் குடும்பதிற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சட்டீஸ்கரில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த தொகையை விரைவில் அவரது குடும்பத்திடம் சேர்க்குமாறும் உத்தரவிடப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.