தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சசிகலா பற்றிய வாதம் வேண்டாம்: பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

இரட்டை இலைச் சின்னம் குறித்து மட்டும் வாதிடுங்கள், சசிகலா நியமனம் பற்றிய வாதங்கள் வேண்டாம் என்று பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

தினமணி


புது தில்லி: இரட்டை இலைச் சின்னம் குறித்து மட்டும் வாதிடுங்கள், சசிகலா நியமனம் பற்றிய வாதங்கள் வேண்டாம் என்று பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இரட்டை இலைச் சின்னம் குறித்த விசாரணை, தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் புது தில்லியில் இன்று காலை தொடங்கியது.

இதில், அதிமுக பொதுச் செயலர் சசிகலா தரப்பில் ஆஜரானவர்கள் முதலில் தங்களது வாதங்களை முன் வைத்தனர். அவர்கள் தரப்பு வாதம் முடிந்த பிறகு பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரானவர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

அப்போது, அதிமுக தாற்காலிகப் பொதுச் செயலராக இருக்கும் சசிகலாவுக்கே தேர்தலில் போட்டியிட தகுதியில்லாத நிலை இருக்கிறது. அப்படி இருக்கும் போது, தகுதியில்லாத சசிகலா மற்றொரு வேட்பாளருக்கு எப்படி அங்கீகாரம் அளிக்க முடியும் என்று வாதிட்டனர்.

இதனைக் கேட்ட தேர்தல் ஆணையம், சசிகலா நியமனம் குறித்த வாதம் இப்போது வேண்டாம். இரட்டை இலைச் சின்னம் குறித்து மட்டும் இங்கே வாதங்களை முன் வையுங்கள் என்று அறிவுறுத்தியது.

விசாரணையின் போது சசிகலா தரப்பில் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், சிவி சண்முகம் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.