தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி வெட்டி கொலை!

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விவசாயியை மர்ம நப்ரள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். கொலையாளிகளை போலீஸார்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

தினமணி

திருச்சி: அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விவசாயியை மர்ம நப்ரள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
              
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நகர் ஊராட்சியில் உள்ள மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் தர்மருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் வினோத் என்பவருக்கும்  இடையே வீட்டு வாசல் முன்பு தண்ணீர் ஊற்றியது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது.

இதில், பாதிக்கப்பட்ட தர்மர் லால்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில், படுக்கையில் இருந்த தர்மரை அதே பகுதியினைச் சேர்ந்த மருது என்பவர் அரிவாளால் தலை, முகம், கை ஆகிய இடங்களில் சரமாரியாக் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தர்மரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கொலையாளிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.