தேர்தல் ஆணையத்தில் சின்னம் ஒதுக்கீட்டின் போது நடந்தது என்ன?
அதிமுக பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டதை அடுத்த, சசிகலா, பன்னீர்செல்வம் தரப்புக்கு புதிய கட்சிச் சின்னமும், பெயரும் வழங்கப்பட்டுள்ளது.


புது தில்லி: அதிமுக பெயர் மற்றும் சின்னம் முடக்கப்பட்டதை அடுத்த, சசிகலா, பன்னீர்செல்வம் தரப்புக்கு புதிய கட்சிச் சின்னமும், பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளும் தாங்கள் விரும்பும் மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டது.
அதே போல, பேட், ஆட்டோ, தொப்பி ஆகிய சின்னங்களை சசிகலா தரப்பு கேட்டது. பன்னீர்செல்வம் தரப்பில் கேட்கப்பட்ட 3 சின்னங்களில் இரட்டை மின் விளக்கு சின்னம் முதல் வாய்ப்பாக இருந்தது.
தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பும் கொடுத்த சின்னங்கள் பரிசீலனையில் இருந்த போது, பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை மின் விளக்கு கேட்கப்பட்டதை அறிந்த சசிகலா தரப்பினர், தங்களுக்கே அந்த சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள், சுயமாக சிந்தியுங்கள் என்று கூறி, அவர்கள் கொடுத்த 3ல் எது வேண்டும் என்று கேட்டனர். அப்போது ஆட்டோ சின்னம் வேண்டும் என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டது. பிறகு, அவர்கள் தங்கள் கட்சி மேலிடத்துக்கு போனில் இது குறித்து தெரிவித்த போது, தொப்பி சின்னத்தை மாற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனால்தான், சசிகலா தரப்புக்கு முதலில் வழங்கப்பட்ட ஆட்டோ சின்னம் மாற்றப்பட்டு பிறகு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. புதன்கிழமையன்று இரட்டை இலையை இழந்த நிலையில், இன்று இரட்டை மின் விளக்கு சின்னத்தை போராடி பெறாத சசிகலா தரப்பினரை, கட்சித் தலைமை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம் தரப்பில் முதல் வாய்ப்பாக இருந்த இரட்டை மின் விளக்கு சின்னமே ஒதுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...