சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முடிவை எதிர்த்து வழக்கு தொடருவோம்: டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் (அதிமுக) தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று கட்சியின் துணைப்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

தினமணி

இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் (அதிமுக) தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை இரவு அவர் அளித்த பேட்டி: ''இரட்டை இலை சின்னம் தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சின்னத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். சின்னத்தை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்து அனைவரும் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்.

மீண்டும் சரித்திரம் திரும்பியுள்ளது. 1987-இல் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இதை போன்ற சூழல் நிலவியது. அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியோடு எதிர்கொண்டு சின்னத்தை மீட்டெடுத்தார். அதுபோல் இப்போதும் சின்னம் மீட்டெடுக்கப்படும். சின்னம் முடக்கப்பட்டதில் ஓ.பன்னீர்செல்வத்தின் பங்கு உள்ளது.

சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். நீதிமன்றத்தில் எங்கள் வாதங்களை முன்வைத்து சட்டப் போராட்டத்தில் வெற்றிபெறுவோம்.

அரசியல் அனுபவம்: இரட்டை இலை சின்னத்தை தாற்காலிகமாக முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு பின்னடைவு அல்ல; அரசியல் அனுபவம்.

இடைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை. அந்தத் தொகுதியில் போட்டியிட இன்று வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் நான் வெற்றி பெறுவது உறுதி என்றார் டிடிவி தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.