மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஏப்ரலில் 3 காற்றுச் சுழற்சிகள் தமிழகத்தில் மழை வாய்ப்பு: தேநீர் கடை வானிலை தகவல்

ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து 3 காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகட்டூர் தேநீர் கடையில் எழுதப்பட்டுள்ள வானிலை தகவல் கூறுகிறது.

News image
Updated On :24 மார்ச் 2017, 4:32 am

ஏப்ரல் மாதத்தில் அடுத்தடுத்து 3 காற்றுச் சுழற்சிகள் உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகட்டூர் தேநீர் கடையில் எழுதப்பட்டுள்ள வானிலை தகவல் கூறுகிறது.

இதுகுறித்து அக்கடையில் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார் வியாழக்கிழமை எழுதியுள்ள தகவல்: மார்ச் 28, 29 தேதிகளில் முத்துப்பேட்டை முதல் தூத்துக்குடி வரை கடலோரத்தில் மழைக்கு வாய்ப்பு வாய்ப்புள்ளது. அதேபோல் ஏப்ரல் 3 முதல் 6 வரை டெல்டா, தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

காற்றுச் சுழற்சி காரணமாக ஏப்ரல் 13-17, ஏப்.20-24, ஏப்.30-மே.5, மே.10-18 ஆகிய தேதிகளில் டெல்டா, உள்தமிழகம், தென் தமிழகத்தில் மிதமான அல்லது சற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.