நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திண்டுக்கலில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


திண்டுக்கல் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப்பேரவையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கொத்தயம் கிராமத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணி குறித்து ஆற்றிய உரை,
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கொத்தயம் கிராமத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே ஏரி அமைக்கும் பணிக்காக 6 கோடியே 97 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம், கொத்தயம் மற்றும் போடுவார்பட்டி கிராமங்களில் 804 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையிலும், 576 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு 20 ஏக்கர் புறம்போக்கு நிலத்தைத் தவிர, கொத்தயம் கிராமத்தில் 82.78 ஏக்கர் நிலமும், போடுவார்பட்டி கிராமத்தில் 48.72 ஏக்கர் நிலமும் ஆக
மொத்தம் 131.50 ஏக்கர் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். இத்திட்டத்திற்கு 30.1.2015 அன்று 11 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கி, தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.
தற்போது கொத்தயம் கிராமத்தில் 82.78 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. போடுவார்பட்டி கிராமத்தில் நில மதிப்பு நிர்ணயம் செய்தபோது, நில உரிமைதாரர்கள் கூடுதல் இழப்பீடு கேட்ட காரணத்தினால், நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் 30.11.2016 அன்று திருத்திய நில மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு, 48.72 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏரி அமைக்கும் பணி 50 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவு பெறாததால், இப்பணிக்கான ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இப்பணிக்கு, இதுநாள் வரை நிலம் கையகப்படுத்த 5 கோடியே 25 லட்சம் ரூபாயும், பணிகளுக்கு 4 கோடியே 61 லட்சம் ரூபாயும் என ஆக மொத்தம் 9
கோடியே 86 லட்சம் ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் இருப்பதால், இப்பணிக்கான திருத்திய மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...