கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழக விவசாயிகள் இன்று இரவு குடியரசுத்தலைவர் பிரணாப்புடன் சந்திப்பு!

புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்றிரவு ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:20 am

தினமணி

புதுதில்லி: புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்றிரவு 7.30 மணிக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர்.

வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பானது தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். அவர்களது போராட்டம் குறித்த தகவல்களை கேட்டறிந்தவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இத்தனை நாட்களாக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது மத்திய அரசு செய்யும் மிகப்பெரிய தவறாகும். இது குறித்து உரிய கவனத்தை பெரும் பொருட்டு, விவசாயிகள் அமைப்பினர்  இன்று இரவு 7.30 மணிக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் அவர்களை சந்திக்க உள்ளார்கள். விவசாயிகள் அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களுடன் நானும் குடியரசுத்தலைவர் பிரணாப் அவர்களை சந்திக்க உள்ளேன்.

இவ்வாறு வாசன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.